அங்குர் வாரிக்கூ தன்னுடைய முதல் நூலில், தன்னுடைய பயணத்திற்கு உந்துசக்தியாக விளங்கிய முக்கிய யோசனைகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். அவர் ஒரு விண்வெளிப் பொறியாளராக ஆக விரும்பியதில் தொடங்கிய அவருடைய பயணம், இலட்சக்கணக்கானவர்கள் இணையத்தில் பார்த்தும் படித்தும் உள்ள பல்வேறு படைப்புகளை உருவாக்குவதில் முடிந்தது. நீண்டகால வெற்றிக்குத் தேவையான பழக்கங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தில் தொடங்கி, நிதி நிர்வாகத்திற்கான அடித்தளம்வரையும், தோல்வியை ஆரத் தழுவிக் கொள்வது மற்றும் ஏற்றுக் கொள்வதில் தொடங்கி, பச்சாதாபத்தைக் கற்றுக் கொள்வதைப் பற்றிய உண்மைவரையும் அவருடைய சிந்தனை பரந்துபட்டதாக இருக்கிறது. இப்புத்தகம் நீங்கள் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டிய ஒன்று. இதிலுள்ள வரிகளை நீங்கள் அடிக்கோடிட்டுக் கொண்டு பின்னர் மீண்டும் மீண்டும் அவற்றைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பீர்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அந்நியர்களுக்கும் கொடுக்கப் போகின்ற ஒரு புத்தகம் இது. மிக அதிகமாகப் பரிசளிக்கப்பட்டப் புத்தகமாக இப்புத்தகம் உருவெடுக்க வேண்டும் என்பது அங்குரின் விருப்பமாகும். ..ABOUT THE AUTHOR. அங்குர் வாரிக்கூ ஒரு தொழிலதிபர், ஆசிரியர், டிஜிட்டல் உள்ளீடுகள் வடிவமைப்பாளர், மற்றும் வழிகாட்டி ஆவார். அவர் nearbuy.com நிறுவனத்தைத் தோற்றுவித்தார். 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுவரை அவர் அதன் முதன்மை நிர்வாக அதிகாரியாக இருந்தார். அதற்கு முன்பு, குரூப்பான்ஸ் இந்தியா பிசினஸைத் தோற்றுவித்து அவர் அதன் முதன்மை நிர்வாக அதிகாரியாகச் செயல்பட்டார். இன்று, டிஜிட்டல் உள்ளீடுகளை வடிவமைப்பதிலும், ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதிலும், முதல் முறையாக ஒரு தொழிலைத் தொடங்குபவர்களுக்கு வழிகாட்டுவதிலும் அவர் தன்னுடைய நேரத்தைச் செலவிட்டு வருகிறார்.
Ankur Warikoo is an entrepreneur, teacher, content creator and mentor. Ankur founded nearbuy.com and was its CEO from its inception in 215 until 219. Prior to that, Ankur was the founding CEO of Groupon's India business. Today he spends his time creating content, teaching online and mentoring first-time founders.
Ankur WarikooAdd a review
Login to write a review.
Customer questions & answers