மனிதர்கள் இயல்பிலேயே தன்னலவாதிகள் என்றும், தங்களுடைய சொந்த நலனுக்கு முன்னுரிமை கொடுத்தே அனைத்தையும் செய்பவர்கள் அவர்கள் என்றும் காலங்காலமாக நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இடதுசாரிகளிலிருந்து வலதுசாரிகள்வரை, வரலாற்றியலாளர்களிலிருந்து எழுத்தாளர்கள்வரை, உளவியலாளர்களிலிருந்து தத்துவவியலாளர்கள்வரை அனைவரையும் ஒன்றிணைக்கின்ற ஒரு நம்பிக்கை அது. இந்த நம்பிக்கையின் வேர்கள் மாக்கியவெல்லியிலிருந்து ஹாப்ஸ்வரை, சிக்மண்ட் பிராய்டிலிருந்து டாக்கின்ஸ்வரை மேற்கத்தியச் சிந்தனைக்குள் ஆழமாக ஊடுருவியுள்ளன. ‘மனிதகுலம்’ எனும் இந்நூல் ஒரு புதிய விவாதத்தை முன்வைக்கிறது. அடிப்படையில் மக்கள் நல்லவர்கள் என்று அனுமானிப்பது எதார்த்தமானதாகவும், அதே நேரத்தில் புரட்சிகரமானதாகவும் இருக்கிறது என்ற வாதம்தான் அது. மற்றவர்களோடு போட்டி போடுவதற்குப் பதிலாக அவர்களோடு ஒத்துழைப்பதற்கும், அவர்களைச் சந்தேகிப்பதற்குப் பதிலாக அவர்களை நம்புவதற்கும் நமக்கு ஏற்படுகின்ற உள்ளுணர்வு, பரிணாம அடிப்படையில் உருவான ஒன்று. மற்றவர்களைப் பற்றி மோசமாக நினைப்பது, நாம் அவர்களை எவ்வாறு பார்க்கிறோம் என்பதன்மீது மட்டுமல்லாமல், நம்முடைய அரசியல்மீதும் பொருளாதாரத்தின்மீதும் தாக்கம் ஏற்படுத்துகிறது. சர்வதேச அளவில் விற்பனையில் சாதனை படைத்துள்ள நூல்களை எழுதியுள்ள ருட்கர் பிரெக்மன், இந்த முக்கியமான நூலில், உலகில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பிரபலமான ஆய்வுகளில் சிலவற்றையும், பிரபலமான வரலாற்று நிகழ்வுகளில் சிலவற்றையும் எடுத்து, அவற்றை மறுவடிவமைப்பு செய்து, கடந்த 2,00,000 ஆண்டுகால மனிதகுல வரலாற்றைப் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறார். மனித இனத்தின் இரக்க குணத்திலும், தன்னலம் பாராமல் பிறருடைய நலன்மீது அக்கறை கொள்கின்ற பண்பிலும் நம்பிக்கை கொள்வது எவ்வாறு நாம் சிந்திக்கும் விதத்தை மாற்றியமைக்கும் என்பதையும், அந்த நம்பிக்கை, நம்முடைய சமுதாயத்தில் உண்மையான மாற்றத்தை உருவாக்குவதற்கான அடித்தளமாக எவ்வாறு செயல்படும் என்பதையும் பிரெக்மன் இந்நூலில் காட்டுகிறார்.
Rutger Bregman, a historian and writer at the Correspondent, is one of Europe's most prominent young thinkers. His last book, Utopia for Realists, was a Sunday Times and New York Times bestseller and has been translated into thirty-two languages. He lives in Holland.
Rutger BregmanAdd a review
Login to write a review.
Customer questions & answers