Out Of Maze (Tamil Edition)

  • Format:

எல்லோராலும் மிகவும் நேசிக்கப்பட்ட ‘என் சீஸை நகர்த்தியது யார்?’ நூல் வெளிவந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் தொடர்ச்சியாக இப்போது இந்நூல் வெளிவந்துள்ளது. \n‘என் சீஸை நகர்த்தியது யார்?’ நூலின் கதை எங்கே முடிந்ததோ, அந்த இடத்திலிருந்து தொடங்குகின்ற ‘புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்’ என்ற இந்நூல், உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுவது என்பது பற்றிய ஆழமான உண்மைகளை வழங்குகின்ற ஓர் எளிய கதையாகும். \nசுண்டெலி அளவில் இருந்த ஹெம், ஹா ஆகிய இரண்டு கதாபாத்திரங்களை ‘என் சீஸை நகர்த்தியது யார்?’ நூலில் நாம் முதன்முதலாக சந்தித்தபோது, அவர்கள் பெரிதும் விரும்பி உட்கொண்ட சீஸ் திடீரென்று மாயமாய் மறைந்ததன் காரணமாக எதிர்பாராத மாற்றத்தை அவ்விருவரும் எதிர்கொண்டதை நாம் பார்த்தோம். புதிய சீஸைத் தேடிச் சென்றதன் மூலம், அந்த மாற்றத்தை எப்படி வெற்றிகரமாகக் கையாளுவது என்பதை ஹா கற்றுக் கொண்டான். ஆனால், ஹெம் தான் இருந்த இடத்திலேயே தொடர்ந்து சிக்கிக் கிடந்தான். \nஹெம் அடுத்து என்ன செய்தான் என்பதையும், அவன் கண்டுபிடித்த விஷயங்கள் எப்படி உங்கள் சொந்த வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய புதிர்ப்பாதைகளில் எதிர்ப்படும் புதிர்களுக்குத் தீர்வு காணுவதற்கு உங்களுக்கு உதவும் என்பதையும் இப்போது ‘புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்’ என்ற இந்நூல் வெளிப்படுத்துகிறது \n‘சீஸ்’ என்பது உங்களுக்கு ஊட்டமளிக்கக்கூடிய ஏதோ ஒன்றுக்கான ஓர் உருவகம்தான். அந்த ஏதோ ஒன்று நல்லதொரு வேலையாக இருக்கலாம், அல்லது அன்பான ஓர் உறவு, பணம், உடமைகள், சிறந்த ஆரோக்கியம், அல்லது மன அமைதியாக இருக்கலாம். \n‘புதிர்ப்பாதை’ என்பது நீங்கள் உங்கள் சீஸைக் கண்டுபிடித்து அதை மகிழ்ச்சியாக அனுபவிப்பதிலிருந்து உங்களைத் தடுத்துக் கொண்டிருக்கின்ற ஏதேனும் சவால் அல்லது கடினமான சூழ்நிலைக்கான ஓர் உருவகமாகும். \nஹெம்மும் அவனுடைய புதிய தோழியான ஹோப்பும் மேற்கொண்டுள்ள புதிய பயணத்தில் நீங்கள் அவர்களைப் பின்தொடர்ந்தால், பாரம்பரியச் சிந்தனைக்கு அப்பாற்பட்டுச் சிந்திப்பதன் மூலம் வாழ்க்கையிலிருந்து அதிகமானவற்றை எப்படிப் பெறுவது என்பதை நீங்கள் கண்டறிவீர்கள். இந்நூலில் இடம்பெற்றுள்ள ஆழமான உள்நோக்குகள் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களோடு தொடர்ந்து நீடிக்கும்.

??????? ????????? ???????, ??????? ?????? ???????? ???????????????? ???????????? ??????? ???????????. ?????????? ??????????? ?????????? ?????????? ?????????????? ??????? ??????? ?????????????, ???? ???? ??????????? ?????? ?????? ?????. ?????????? ?????? ????????? ?????????? ??????? ?????? ?????? ???? ????? ???????? ???? ??????????, ????? ??????? ???????????? ???? ??????????????? ??????? ???? ?????????. ??????????? ??????? ????????? ???????? ?????? ????????? ?????????? ?????????? ??????????. ?????, ???????? ??????? ???????? ??????? ?????????? ??? ??????? ????????. ????????? ??????? ?????? ??????????? ??????????????????????? ????????? ??.?. ?????? ????????, ?????? ?????? ???? ????????? ????????????????? ???.??. ?????? ????????. ??????? ????????? ?????????? ??????? ??????? ???? ???????? ????????? ???? ?????????? ??????? ????????. 42 ????????? ??????????????????? ?????????? ??????? ??????????? ???????????? ?????? ???? ?????? ?????????????. ???? 2017?? ??????? ?????????.

Spencer Johnson and NAGALAKSHMI SHANMUGAM

Customer questions & answers

Add a review

Login to write a review.

Related products

Subscribe to Padhega India Newsletter!

Step into a world of stories, offers, and exclusive book buzz- right in your inbox! ✨

Subscribe to our newsletter today and never miss out on the magic of books, special deals, and insider updates. Let’s keep your reading journey inspired! 🌟