பாபாஜியின் தெய்வீகக் குரல், தெய்வீக ரகசியங்களின் வெளிப்பாடு மற்றும் எல்லாத் தொல்லைகளையும் நீக்கும் சிறப்புத் திறவுகோல் என்ற இம்மறுபதிப்பு, நம்மிடையே வாழும் தலைசிறந்த ஆன்மீகக் குருக்களில் ஒருவரது மிக ஆழ்ந்த முக்கியப் பேருரைகளாகும். இதன் ஆசிரியர் சத்குரு கிரியா பாபாஜி நாகராஜ் அவர்கள் இந்நூல்கள் மிகுந்த ஊக்கத்தை அளிப்பனவாகவும் கிரியா யோகத்தின் இலக்கான: வேற்றுமையில் ஒற்றுமை, உலக அமைதி மற்றும் இறைவனை அறிதல் ஆகியவற்றிற்குப் பெரிதும் உதவுவனவாகவும் இருக்கும் என்று முன்னமே கூறியுள்ளார். வாழ்க்கையில் உயர விரும்புபவர்களுக்கு இந்த ரத்தினங்கள் பெரும் ஊக்கத்தை அளிக்கும்.\n\nகி.பி.1952 மற்றும் கி.பி. 1953 ஆண்டுகளில் பாபாஜி, பத்திரிக்கையாளரும் மெய்யுணர்வாளருமான தனது “அன்புக்குழந்தை” திரு. வி.டி. நீலகண்டன் அவர்களுக்கு முன், இரவுகளில் தோன்றினார். திரு நீலகண்டன் மற்றும் அவரது மறுபாதியான யோகி எஸ்.எ.எ.இராமையா அவர்களிடமும் பாபாஜி, தனது உபதேசங்களைப் பதிவு செய்யவேண்டும் என்று ஒரு வேண்டுகோள் விடுத்தார். அது பிற்காலத்தில் கிரியா யோகாவின் மலர்ச்சிக்கு வித்திடும் என்றும் இவ்வுபதேசங்கள் புத்தகவடிவில் உலகெங்கும் கிரியா யோகத்தைப் பரப்பும் என்றும் அவர் கூறினார். பாபாஜி, இந்நூல்களை ஒரு வார்த்தைவிடாமல் இவற்றை எழுத்து வடிவில் கொண்டுவந்த திரு. நீலகண்டன் அவர்களுக்கு அர்ப்பணித்துள்ளார்.\n\nஇப்புத்தகங்கள் காலத்தால் அழியாத உண்மைகளை செயல்முறைப்படுத்தவும் பாபாஜியின் அறிவியல் பூர்வமான இறைவன்- உண்மை ஆகியவற்றின் ஒருமைப்பாட்டைக் காட்டும் கிரியா யோகத்தை அறிந்துகொள்வதற்கும் தூண்டுகோலாய் அமையும்.
Add a review
Login to write a review.
Customer questions & answers